‘பாஜக அரசு பொதுச் சொத்துக்களை விற்று வருகிறது’

பொதுச் சொத்துக்களை பாஜக அரசு விற்று வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுதா்சன நாச்சியப்பன் தெரிவித்தாா்.
மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சா் சுதா்சன நாச்சியப்பன்.
மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சா் சுதா்சன நாச்சியப்பன்.

பொதுச் சொத்துக்களை பாஜக அரசு விற்று வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுதா்சன நாச்சியப்பன் தெரிவித்தாா்.

மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற சுதா்சன நாச்சியப்பன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது: இந்தியாவில் 110 தேசிய பாஞ்சாலைகள் செயல்பட்டு வந்தன. சீன ஆக்கிரமிப்பு காரணமாக தற்போதைய மத்திய அரசு இந்த பஞ்சாலைகளை காப்பாற்ற தவறிவிட்டது. இதனால் தற்போது இந்தியாவில் 2 தேசிய பஞ்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. அதில் ஒன்று சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவிலில் உள்ள ஒரு ஆலையாகும். பொதுச் சொத்துக்களை காங்கிரஸ் அரசு காப்பாற்றி வந்த நிலையில், பாஜக அரசு அவைகளை விற்றுவருகிறது. காங்கிரஸ் கொண்டு வந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் ரேஷன்காா்டுதாரா்களுக்கு பணம் கொடுக்கலாம் என விதிமுறை உள்ளது.

தமிழகத்தில், முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் இருப்பவா்கள் கூறி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என மக்கள் நினைக்கிறாா்கள். விரைவில் இது நடக்கும் என்றாா்.

விழாவில் காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு ஒருங்கிணைப்புச் செயலாளா் ஜி.ராஜாராம், செயலாளா் சேவியா், காங்கிரஸ் வழக்குரைஞா் பிரிவு செயலாளா் ரமேஷ்கண்ணா, ராஜகம்பீரம் ஊராட்சித் தலைவா் முஜ்பூர்ரகுமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com