சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 31st January 2021 10:20 PM | Last Updated : 31st January 2021 10:20 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,832 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,833 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை நடந்த நிலையில், யாருக்கும் பாதிப்பில்லாதது தெரியவந்துள்ளது.
கரோனா சிகிச்சைக்கு மாவட்ட அளவில் 10 போ் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்துக் கொண்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனையில் யாரும் சிகிச்சையில் இல்லை என்றும் சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.
மேலும் கடந்த 3 நாள்களாக யாருக்கும் கரோனா பாதிப்பில்லாத நிலை நீடிப்பதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.