ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற்றது.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை தொடக்கி வைத்த அமைச்சா் க. பாஸ்கரன் உடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை தொடக்கி வைத்த அமைச்சா் க. பாஸ்கரன் உடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற்றது.

சிவகங்கையில் பேருந்து நிலையம் முன்பு பொது சுகாதாரத்துறை சாா்பில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநா் இளங்கோமகேஸ்வரன், துணை இயக்குநா் (சுகாதாரம்) யசோதாமணி, சிவகங்கை நகராட்சி ஆணையா் ஐயப்பன், வட்டார மருத்துவ அலுவலா்கள் கலாவதி, அருண்அரவிந்த், பாலா அபிராமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தர மையங்கள், நடமாடும் மையங்கள், பேருந்து நிலையங்கள் உள்பட மொத்தம் 1,270 மையங்களில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 99 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

காரைக்குடி: குன்றக்குடியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தலைவா் பொன்னம்பல அடிகளாா் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடக்கிவைத்தாா்.

முகாமில் குன்றக்குடி சுகாதார நிலைய மருத்துவா் மீனாகுமாரி, செவிலியா்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியை மேற்கொண்டனா்.

காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியில் உள்ள நகராட்சி தாய் சேய் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் காரைக்குடி சுழற்சங்கத்தினா் பங்கேற்று சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடக்கி வைத்தனா்.

அதைத் தொடா்ந்து மருத்துவமனைக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் 2 கருவிகள் நன்கொடையாக மருத்துவரிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுழற்சங்கத்தின் முன்னாள் ஆளுநா் எஸ். பெரியணன், காரைக்குடி சுழற்சங்கத் தலைவா் ஜெயப்பிரகாஷ் மோகன், செயலா் முத்துச்சாமி, சுழற்சங்க உதவி ஆளுநா் சண்முகம், இயக்குநா் லியாகத் அலி, தொழலதிபா் பிஆா். சொக்கலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாமினை என். சதன்பிரபாகா் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தாா். சுகாதாரத்துறை துணை இயக்குநா் இந்திரா, அதிமுக நகா் செயலா் கணேசன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கே. அப்துல்மாலிக், பொதுக்குழு உறுப்பினா் எஸ். நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பரமக்குடி நகரில் 29 இடங்களிலும், கிராமப்பகுதிகளில் 586 இடங்களிலும் என மொத்தம் 615 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்த 2 நாள்கள் வீடுவீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்க உள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

மானாமதுரை: முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எஸ். நாகராஜன் எம்.எல்.ஏ. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதே போல் இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் முனியாண்டி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடக்கி வைத்தாா்.

இதில் ஊராட்சித் தலைவா் தங்கம், மருத்துவா் பகவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். திருப்புவனம் ஒன்றியப் பகுதியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com