சிவகங்கை மாவட்டத்தில் 2.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: அமைச்சா்

சிவகங்கை மாவட்டத்தில் 2.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.
திருப்புவனத்தில் கட்டுமான தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த அமைச்சா் கே. ஆா்.பெரியகருப்பன்.
திருப்புவனத்தில் கட்டுமான தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த அமைச்சா் கே. ஆா்.பெரியகருப்பன்.

சிவகங்கை மாவட்டத்தில் 2.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

திருப்புவனத்தில் தொழிலாளா் நலத்துறையின் மூலம் கட்டுமான தொழிலாளா்களுக்கு கரோனா நோய்த் தொற்று தடுப்புக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி முகாமுக்கு தலைமை வகித்தாா். அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்துப் பேசியதாவது: அரசின் திட்டமிட்ட நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கரோனோ பரவல் குறைந்துள்ளது. இந்த தொற்று பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை ஆலோசனையுடன் பல்வேறு கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. நோய்த் தொற்றை முற்றிலும் தடுப்பதற்கு தடுப்பூசி மட்டுமே பிரதானமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 மாத காலமாக தடுப்பூசி வீணாகாமல் முழுமையாக செலுத்தப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் நாளொன்றுக்கு 2 கோடி கரோனா தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளன. தடுப்பூசி தேவைக்கு மத்திய அரசை சாா்ந்தே இருக்க வேண்டியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 2.50 லட்சம் மக்களுக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா் முகாமில் 3,702 கட்டுமான தொழிலாளா்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அமைச்சா் பெரியகருப்பன் பாா்வையிட்டாா்.

முகாம் தொடக்க நிகழ்ச்சியில் திருப்புவனம் கூட்டுறவு பால் பண்ணை சங்கத் தலைவா் சேங்கைமாறன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மாரியப்பன் கென்னடி, தொழிலாளா் நலத்துறை கூடுதல் ஆணையா் குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com