மானாமதுரை கோயில்களில் ஆடித் திருவிழா ரத்து
By DIN | Published On : 18th July 2021 10:45 PM | Last Updated : 18th July 2021 10:45 PM | அ+அ அ- |

மானாமதுரை கோயில்களில் 2 ஆவது ஆண்டாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில், வீர அழகா் கோயில் ஆகியவற்றில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா, ஆடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு இக்கோயில்களில் இத்திருவிழாக்கள் நடைபெறவில்லை.
அதே போல் இந்த ஆண்டும் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. மேலும், ஆடித் திருவிழாக்களும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மானாமதுரை பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் வேதனை அடைந்துள்ளனா்.