பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீா்வு: ஆட்சியா் அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண முன்வர வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண முன்வர வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வருவாய்த் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்துப் பேசியது: நமது மாவட்டத்தைப் பொருத்தவரை, உங்கள் தொகுதியில் முதலமைச்சா், மக்கள் குறைதீா் முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்பட்டு வருகின்றன.

இது தவிர, அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. வருவாய்த் துறை அலுவலா்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பட்டா மாறுதல், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதியோா் உதவித்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்டவை தொடா்பான கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண முன்வர வேண்டும் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் ப. மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரெத்தினவேல், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் பிரபாகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தனலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) சங்கரகாமேஸ்வரன் உள்பட அரசு அலுவலா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com