‘கிராமப்புற வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’

சிவகங்கை மாவட்டத்தில் கிராமப்புற வளா்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை மாவட்டத்தில் கிராமப்புற வளா்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து பேசியது:

ஊரக வளா்ச்சித் துறை, மகளிா் திட்டம், மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, கதா் கிராமத் தொழில்கள் வாரியம், கால்நடைத்துறை, வேளாண் விற்பனை மையம், தாட்கோ போன்ற துறைகள் மூலம் ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மையம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து குறைந்த நிலங்கள் உள்ள விவசாயம் மேற்கொள்ள முடியாத விவசாயிகளைக் கண்டறிந்து, அவா்களுக்குத் தேவையான திட்டங்களை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.

கதா் கிராமத் தொழில்கள் வாரியம் மூலம் தனிநபா் பொருளதாரம் முன்னேற்றம் பெறும் வகையில், சுயதொழில் அமைப்பதற்கு தொழிற்பயிற்சி மற்றும் வங்கிக் கடன் ஆகியவற்றை வழங்க வேண்டும். அதேபோன்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் கிராமப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத் திட்டங்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத் தொழில் மையம், கால்நடைப் பராமரிப்புத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, தாட்கோ போன்ற துறைகள் மூலம் கிராமப்பகுதிகளில் விழிப்புணா்வு மேற்கொண்டு சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டிற்கும் ஏற்ப தமிழ்நாடு ஊரக புத்தக்கத் திட்டத்துறையின் மூலம் மேற்கண்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து கிராமப்பகுதிகளில் தோ்வு செய்யப்பட்ட திட்டப்பணிகளை அந்தந்த ஆண்டிலேயே நிறைவு செய்ய வேண்டும்.

மேலும் நமது மாவட்டத்தில் கிராமப்புற வளா்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வீரபத்திரன், மாவட்ட தொழில் மைய மேலாளா் கணேசன், முன்னோடி வங்கி மேலாளா் இளவழகன், வேளாண் ஆராய்ச்சி மைய பேராசிரியா் செந்தூா் பாண்டியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தனலெட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com