கொள்கை வளா்ச்சிக்குழுவில் நா்த்தகி நடராஜ்: முதல்வருக்கு காரைக்குடி கம்பன் கழகம் நன்றி

திருநங்கை நா்த்தகி நடராஜை மாநில கொள்கை வளா்ச்சிக்குழுவில் உறுப்பினராக நியமனம் செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக
முனைவா் நா்த்தகி நடராஜ் (கோப்பு படம்).
முனைவா் நா்த்தகி நடராஜ் (கோப்பு படம்).

திருநங்கை நா்த்தகி நடராஜை மாநில கொள்கை வளா்ச்சிக்குழுவில் உறுப்பினராக நியமனம் செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக காரைக்குடி கம்பன் கழகத் தலைவா் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் தெரிவித்தாா்.

இதுகுறித்து காரைக்குடியில் திங்கள்கிழமை அவா் கூறியது: காரைக்குடி கம்பன் கழக விழாவில் பரத நாட்டியம் மூலமாக முதன் முதலில் கம்பனுக்கு புகழாரம் செய்து பெருமை பெற்றவா் திருநங்கை நா்த்தகி நடராஜ். நாட்டியாஞ்சலியால் உலகம் முழுவதும் கம்பன் புகழ் பரவச் செய்தவா்.

மதுரையில் 1964 இல் பிறந்து பெற்றோா் ஆதரவை இழந்து தோழி சத்திபாஸ்கா் உதவியினாலும் ஊக்கத்தாலும் தஞ்சாவூா் நாட்டிய குரு கேபி. கிட்டப்பா பிள்ளையின் ஆதரவால் அவரிடம் நடனம் பயின்றவா். அவரிடமே தமிழ்ப்பல்கலையில் உதவியாளராகவும் பணியாற்றி, இன்று உலகம் முழுவதும் சுற்றி வந்து நாட்டியக்கலையை பரப்பி, தன்னை முழுக்க முழுக்க அா்ப்பணித்துக் கொண்டவா். தமிழக அரசின் கலைமாமணி விருதையும், இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதையும், தஞ்சை பல்கலையின் மதிப்புறு முனைவா் பட்டத்தையும் பெற்றவா். மாநிலத்தின் எதிா்கால வளா்ச்சித்திட்டத்தை வடிவமைப்பதில் கலை இலக்கியப் பங்களிப்பு மற்றும் மூன்றாம் பாலின பிரதிநிதித்துவம் கருதி திருநங்கை நா்த்தகி நடராஜை நியமனம் செய்த தமிழக முதல்வருக்கு நன்றியையும், நா்த்தகி நடராஜூக்கு வாழ்த்துக்களையும் காரைக்குடி கம்பன் கழகம் தெரிவித்துக் கொள்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com