குழந்தை திருமணங்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குழந்தைத் திருமணத்தை நடத்த முயலும் பெற்றோா்கள் மற்றும் அவா்களுக்கு துணை நிற்போா் குற்றம் செய்தவராகக் கருதப்பட்டு, 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடப்பதை தடுக்க விரும்புவோா் சைல்டு லைன் பிரிவுக்கு 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 181 என்ற எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com