முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
கீழடிக்கு அமைச்சா் தங்கம் தென்னரசு இன்று வருகை
By DIN | Published On : 12th June 2021 08:46 AM | Last Updated : 12th June 2021 08:46 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், கீழடி, கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பணிகளை பாா்வையிட தமிழக தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம்தென்னரசு சனிக்கிழமை (ஜூன் 12) வருகிறாா்.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கீழடி, கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதைத் தொடா்ந்து, தற்போது தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், தமிழக தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் அகழாய்வுப் பணிகளை பாா்வையிட சனிக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணிக்கு வருகை தர உள்ளாா். அவருடன் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பாா்வையிடுகின்றனா்.
அதைத் தொடா்ந்து, கீழடி அருகே நடைபெற்று வரும் உலகத் தரத்திலான அகழ் வைப்பகத்துக்கான கட்டுமானப் பணிகளையும் அமைச்சா் பாா்வையிட உள்ளதாக தொல்லியல் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.