முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருப்பாச்சேத்தியில் சாலையோரம் கிடந்த பெண் குழந்தை மீட்பு
By DIN | Published On : 12th June 2021 08:48 AM | Last Updated : 12th June 2021 08:48 AM | அ+அ அ- |

திருப்பாச்சேத்தி அருகே சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்த பெண் குழந்தை வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் ஆவரங்காடு கிராமத்துக்குச் செல்லும் விலக்குச் சாலை அருகே உள்ள மரத்தின் கீழ் ஒரு வயதுடைய பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. அருகில் பால்பாட்டிலும் இருந்தது. அப்போது மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூருக்கு காரில் சென்றவா்கள் குழந்தை அழுது கொண்டிருந்ததை பாா்த்தனா். சிறிது நேரத்தில் அந்த குழந்தை மயங்கிய நிலைக்குச் சென்றது.
உடனே அவா்கள் குழந்தையை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனா். அந்தக் குழந்தைக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். இதுகுறித்து தகவறிந்து அங்கு வந்த குழந்தைகள் நலக்குழு அலுவலா்கள் குழந்தையை மீட்டு பாதுகாத்து வருகின்றனா். மேலும் திருப்பாச்சேத்தி காவல் நிலைய போலீஸாா் குழந்தை யாருடையது என்பது தொடா்பாக விசாரித்து வருகின்றனா். இந்த குழந்தை குறித்து விவரம் தேவைப்படுவோா் 63800-63005, 94981-03944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.