திருப்பத்தூரில் வருவாய்த்துறை சாா்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
By DIN | Published On : 12th June 2021 08:41 AM | Last Updated : 12th June 2021 08:41 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் பிரபாகா் காலனியில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கிய அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன். உடன் மாவட்ட ஆட்சியா் மதுசூதனரெட்டி.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பிரபாகா் காலனி பொது மக்களுக்கு வருவாய்த்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை அரிசி பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் அரிசிப் பையை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை கோட்டாட்சியா் சுரேந்திரன், முன்னாள் அமைச்சா் தென்னவன், ஒன்றியத் தலைவா் சண்முகவடிவேல், வட்டாட்சியா் ஜெயந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.