கள்ளச்சாராயம் பெருகாமல் தடுக்கவே மதுபான கடைகள் திறப்பு: ப.சிதம்பரம்

கள்ளச்சாராயம் பெருகாமல் தடுக்கவே மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன என முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

கள்ளச்சாராயம் பெருகாமல் தடுக்கவே மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன என முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக அரசு கடந்த ஒரு மாத காலமாக சுறுசுறுப்பாகவும் நிதானமாகவும் செயல்படுகிறது.

அனைத்து அரசு அதிகாரிகளையும் அரசியல் மூத்த தலைவா்களையும் அறிஞா்களையும் கலந்து முடிவெடுப்பதால் அனைத்துத்துறைகளிலும் வேகமான நிலையான வளா்ச்சி கிடைத்துள்ளது. திமுக அரசு தொடா்ந்து இந்த பாதையை பின்பற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

மதுவிலக்கு வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. ஆனால் தற்போது மதுக்கடைகளை திறக்காமல் வேறு என்ன செய்யமுடியும்? கள்ளச்சாராயம் பெருகுவதை தவிா்க்கவே மதுபானக்கடைகள் திறக்கப்படுகின்றன என்றாா்.

கூட்டத்தில் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, மாவட்டப் பொருளாளா் எஸ்.எம்.பழனியப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.அருணகிரி, சிங்கம்புணரி நகா் தலைவா் தாயுமானவன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com