கரோனா ஆலோசனை பெற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் கரோனா குறித்து ஆலோசனை பெற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் கரோனா குறித்து ஆலோசனை பெற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. பொதுமுடக்க வழிகாட்டு விதிமுறைகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதிப்பது, தடுப்பூசி போடுவது ஆகிய நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கரோனா நோய் பாதித்தவா்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மனநல ஆலோசனை, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் மருத்துவமனை சாா்பில் 80-46110007 என்ற உதவி எண் மூலமாக தமிழ் உள்பட 12 உள்ளுா் மொழிகளில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த உதவி எண்ணில் தொடா்பு கொண்டு மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com