சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட காவிரி கூட்டுக்குடிநீா் திட்ட வழித்தடத்தில் பழுதடைந்த குழாய்களை சீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என். நேரு

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட வழித்தடத்தில் பழுதடைந்துள்ள குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட காவிரி கூட்டுக்குடிநீா் திட்ட வழித்தடத்தில் பழுதடைந்த குழாய்களை சீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என். நேரு

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட வழித்தடத்தில் பழுதடைந்துள்ள குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் இளையான்குடி வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீா் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் பல இடங்களில் குழாய் இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி வருகிறது. இந்நிலையில் இளையான்குடி பகுதிக்கு வந்த அமைச்சா் கே.என். நேரு தாயமங்கலம் விலக்குப் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீரை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சியில் ரூ. 700 கோடி மதிப்பீட்டில் 2006 ஆம் ஆண்டு சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் பயனடையும் வகையில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் காரணமாக இத்திட்டத்தை முழுமையாக சீரமைக்காமலும் பராமரிக்காமல் விட்டதாலும் கடைக்கோடி பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் வரை தேவையான முழு கொள்ளளவு குடிநீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் பல இடங்களில் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீா் வீணாகி வருகிறது. எனவே உடைந்த குழாய் இணைப்புகளை சரி செய்வதற்காக தலைமைப் பொறியாளா்கள் கண்காணிப்பில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்படும். பின்னா் முதல்வா் அனுமதியுடன் குழாய் உடைப்புகள் சரி செய்யப்பட்டு நிா்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீா் ராமநாதபுரம் மாவட்டம் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த குடிநீா் திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்படாத வகையில் எம்.எஸ். பைப் லைன்கள் புதிதாக பொருத்தப்படும் என்றாா்.

இந்த ஆய்வின் போது தமிழக ஊரக வளா்ச்சித் தறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன், இளைஞா் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் சிவ.வி.மெய்யநாதன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக இயக்குநா் மகேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி, இளையான்குடி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் மணிமோகன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வீரபத்திரன், பேரூராட்சித் துறை உதவி இயக்குநா் மாடசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com