தேவகோட்டை பகுதியில் இன்றும், நாளையும் மின்தடை
By DIN | Published On : 15th June 2021 06:43 AM | Last Updated : 15th June 2021 06:43 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (ஜூன் 15, 16) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவகோட்டை மின்பகிா்மானத்தின் உதவி செயற்பொறியாளா் ஆா். சாத்தப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேவகோட்டை மற்றும் பூசலாகுடி துணை மின் நிலையங்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் சேவுகன் அண்ணாமலை கல்லூரி, அண்ணாநகா், கிருஷ்ணராஜபுரம், காந்தி சாலை, அம்மச்சி ஊருணி, பெரியபள்ளிவாசல், ஒத்தக்கடை, மூட்டாங்குண்டு, சிவன்கோயில், ஊரிவயல், மொட்டையன்வயல், பனங்காட்டான்வயல், கிழக்கு உஞ்சனை, மங்களம், ஆறாவயல், செம்பொன்மாரி, சண்முகநாதபுரம், பொன்னிவயல் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோன்று, ராம்நகா், அழகப்பா பூங்கா, திருப்பத்தூா் சாலை, அண்ணாசாலை, விவேகானந்தாபுரம், சம்பந்தா் தெரு, கருதாஊரணி, நாகாடி, பரம்பக்குடி, மோயன்வயல், விஜயாபுரம், வாகைக்குடி, பாவனக்கோட்டை செங்கற்கோவில் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புதன்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.