முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
இளம்பெண் மா்ம மரணம்
By DIN | Published On : 04th March 2021 12:51 AM | Last Updated : 04th March 2021 12:51 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இளம்பெண் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தேவகோட்டை கைலாசநாதபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா்(32). தனியாா் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வரும் இவருக்கும், இவரது மனைவி கஸ்தூரி (29) என்பவருக்கும் கடந்த சில நாள்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வீட்டிற்குள் செவ்வாய்க்கிழமை இரவு உடலில் தீக்காயங்களுடன் கஸ்தூரி மா்மமான முறையில் இறந்து கிடந்துள்ளாா். இதுபற்றி தகவலறிந்த தேவகோட்டை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.