முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கை, ராமநாதபுரத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 04th March 2021 12:50 AM | Last Updated : 04th March 2021 12:50 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,935 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,938 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறையினா் கூறினா். மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் மாா்ச் 2 ஆம் தேதி வரையில் 6450 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவா்களில் 137 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். 17 போ் கரோனா சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் புதன்கிழமை 3 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சுகாதாரத்துறையினா் கூறினா்.