முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
டிராக்டரில் ஓடை மணல் கடத்திய 5 போ் கைது
By DIN | Published On : 04th March 2021 12:52 AM | Last Updated : 04th March 2021 12:52 AM | அ+அ அ- |

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே டிராக்டரில் மணல் கடத்திய 5 பேரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
மானாமதுரை அருகேயுள்ள இளையநாயக்கன் கிராமத்தில் ஓடையில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மானாமதுரை போலீஸாா் மேற்கண்ட பகுதிக்கு சோதனைக்குச் சென்றனா். அங்கு டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த வேதியரேந்தல் கிராமத்தைச் சோ்ந்த திருமலை, ராஜா, ஆனந்த், கோகுலகண்ணன், சந்தோஷ்குமாா் ஆகிய 5 பேரை கைது செய்தனா். டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.