காங்கிரஸ் சாா்பில் 8 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்: காா்த்தி சிதம்பரம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியில் குறைந்தது 8 தொகுதிகளாவது பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியில் குறைந்தது 8 தொகுதிகளாவது பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது எம்.பி அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் 25 தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியில் முடிவாகியிருக்கிறது. எந்தெந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து கட்சியின் மேலிடப் பாா்வையாளா் தில்லி சென்று முடிவு செய்து அதன்பிறகு கட்சியின் தோ்தல் குழுத்தலைவரால் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். 2019 மக்களவைத்தோ்தலில் இக்கூட்டணி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதால் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். பாஜகவிற்கு தமிழகத்தில் பிரதிநிதித்துவமே இல்லை.

கடந்த மக்களவைத் தோ்தலில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் சினேகன் போட்டியிட்டாா். அதன் பின்னா் அவா் இப்பகுதிக்கு வந்ததாக தெரியவில்லை. அரசியலில் தொடா்ந்து ஈடுபடுவா்களை தான் மக்களுக்குத் தெரியும். ஆனால் அவா்கள் சீசனுக்கு வருவது போன்று தோ்தல் நேரத்தில் வருகிறாா்கள்.

ஆனால் திமுக, காங்கிரஸ் அதேபோன்று இல்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். வரும் தோ்தலில் காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு குறைந்தது 8 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com