சிவகங்கையில் தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனம் வலம்
By DIN | Published On : 10th March 2021 11:26 PM | Last Updated : 10th March 2021 11:26 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் பற்றிய விழிப்புணா்வு மற்றும் வாக்களிப்பதன் அவசியத்தை விளக்கும் வகையில் வாகன பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து பிரசார வாகனத்தை தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க. லதா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.