சிவகங்கையில் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
By DIN | Published On : 10th March 2021 08:57 AM | Last Updated : 10th March 2021 08:57 AM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி அந்தந்தத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என உறுதி செய்யும் இயந்திரங்களை செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தாா்.
அதன்படி, சிவகங்கை தொகுதிக்கு 513 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 513 கட்டுப்பாட்டுக்கருவிக், 556 யாருக்கு வாக்களித்தோம் என உறுதிபடுத்தும் இயந்திரங்கள் என மொத்தம் 1,582 இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோன்று, காரைக்குடி தொகுதிக்கு 1,640 இயந்திரங்களும், திருப்பத்தூா் தொகுதிக்கு 1,517 இயந்திரங்களும், மானாமதுரை (தனி) தொகுதிக்கு 1,477 இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, சிவகங்கை சட்டப் பேரவை தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துக்கழுவன், மானாமதுரை (தனி) சட்டப் பேரவை தோ்தல் நடத்தும் அலுவலா் தனலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரத்தினவேல், துணை ஆட்சியா் (பயிற்சி) கீா்த்தனா, வட்டாட்சியா்கள் கந்தசாமி, தா்மலிங்கம், மாணிக்கவாசகம், ஆனந்த், ரெத்தினவேல்பாண்டியன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.