காரைக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு
By DIN | Published On : 10th March 2021 11:28 PM | Last Updated : 10th March 2021 11:28 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 443 மையங்களுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், 20 சதவீதம் கூடுதல் இயந்திரங்களுடன் 53 பெட்டிகளில் 532 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 532 வாக்குப் பதிவு கட்டுப்பாட்டுக் கருவிகளும் சிவகங்கை மாவட்ட ஆட்சியா்அலுவலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் காரைக்குடிக்கு வந்து சோ்ந்தது.
பின்னா், காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் அனைத்தும் சரிபாா்க்கப்பட்டு, முதல்மாடியில் வைத்துப்பூட்டி அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். இதில் வாக்காளா்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 570 இயந்திரங்களும் உள்ளன.
தேவகோட்டைகோட்டாட்சியா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலருமான சுரேந்திரன், காரைக்குடி வட்டாட்சியா் மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலருமான அந்தோணிராஜ் ஆகியோா் மேற்பாா்வையில், சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.