முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கை : இந்திய கம்யூ. கட்சி வேட்பாளராக எஸ்.குணசேகரன் 4-ஆவது முறையாக போட்டி
By DIN | Published On : 14th March 2021 10:18 PM | Last Updated : 14th March 2021 10:18 PM | அ+அ அ- |

சிவகங்கை : இந்திய கம்யூ. கட்சி வேட்பாளராக எஸ்.குணசேகரன் 4-ஆவது முறையாக போட்டி
சிவகங்கை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.குணசேகரன் 4 ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.
வேட்பாளா் சுயவிவரம்:
பெயா்: எஸ் குணசேகரன்
படிப்பு: எஸ்எஸ்எல்சி
மனைவி: ஈஸ்வரி, மகன்கள் ஸ்டாலின் சுப்பையா, உமா் முக்தா், இளங்கதிா்
வகித்த கட்சிப் பொறுப்பு: வட்டாரச் செயலா், இளைஞா் மன்ற மாவட்டச் செயலா், மாவட்டச் செயலா்.
தற்போதைய பொறுப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா், விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா்
அரசியல் அனுபவம்: 1986 ஆம் ஆண்டு சிவகங்கை நகா் மன்ற உறுப்பினராகவும், 2001 இல் மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும் இருந்தாா். கடந்த 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். கடந்த 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் இவா் தோல்வி அடைந்தாா்.
இத்தொகுதியில் எஸ்.குணசேகரன் 4 ஆவது முறையாக போட்டியிடுகிறாா்