முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
புரசடி உடைப்பு சிறையில் ஸ்ரீவில்லிபுத்தூா் கைதி திடீா் உயிரிழப்பு
By DIN | Published On : 14th March 2021 10:16 PM | Last Updated : 14th March 2021 10:16 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே புரசடி உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலையில் கைதி ஞாயிற்றுக்கிழமை திடீரென உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள பிள்ளையாா்குளம் ராமகிருஷ்ணாபுரம் புதூரைச் சோ்ந்த அய்யனாா் மகன் தமிழ்ச்செல்வன் (38). இவா் கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
காளையாா்கோவில் அருகே உள்ள புரசடி உடைப்பு கிராமத்தில் திறந்தவெளி சிறைச்சாலை தொடங்கப்பட்ட பின்பு தமிழ்ச்செல்வன் இங்கு மாற்றபட்டாா். இந்நிலையில், இவருக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். ஆனால் அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தமிழ்ச்செல்வன் இறப்பு தொடா்பாக இளையான்குடி நீதிமன்ற நீதிபதி சுனில்ராஜா நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.