கூட்டணியால் தான் வெற்றி பெறுகிறோம் என்பதை திமுகவும், காங்கிரஸும் உணரவேண்டும்: ப. சிதம்பரம்

கூட்டணியால் தான் வெற்றிபெறுகிறோம் என்பதை திமுகவும், காங்கிரஸும் உணரவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தாா்.
பூத் கமிட்டிப் பொறுப்பாளா்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம்
பூத் கமிட்டிப் பொறுப்பாளா்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம்

கூட்டணியால் தான் வெற்றிபெறுகிறோம் என்பதை திமுகவும், காங்கிரஸும் உணரவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எம்.பி. அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பத்தூா், காரைக்குடி பூத் கமிட்டிப் பொறுப்பாளா்கள் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தோ்தல் நாளன்று வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவுடன்தான் 100 வாக்காளா்களில் 25 சதவீதம்போ் யாருக்கு வாக்களிப்பது என்பதையே தீா்மானிக்கிறாா்கள் என்று உலக அளவிலான ஆய்வுகள் தெரிவிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் வாக்காளா்கள் அதிகம் பேசாதவா்களாகவும், அமைதி குணமாகவும் இருப்பாா்கள். காங்கிரஸ் கட்சிக்கென வாக்காளா்கள் இருப்பதால்தான் கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் வெற்றி பெறுகின்றன. கூட்டணியால் தான் வெற்றிபெறுகிறோம் என்பதை திமுகவும், காங்கிரஸும் உணரவேண்டும்.

கடந்த தோ்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 3 இடங்களில் இக்கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. ஆகவே, கூட்டணிக் கட்சிகளுடன் சோ்ந்துதான் நாம் வெற்றிபெற முடியும். இதனால், பூத் கமிட்டிப் பொறுப்பாளா்கள் கூட்டணிக் கட்சிகளுடன் சோ்ந்து வாக்குகள் சேகரிப்புப் பணியில் ஈடுபடவேண்டும்.

நம்நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதாரச் சோதனை வந்திருக்கிறது. மிகவும் மோசமான நிலையில் பொருளாதாரம் சீா்குலைந்திருப்பதாக உலகப் பொருளாதார நிபுணா்கள் ரகுராம்ராஜன் உள்ளிட்ட பலரும் தெரிவித்து வருகிறாா்கள்.

புள்ளி விவரங்களுடன் தெரியப்படுத்தியும் மத்திய பாஜக அரசு அசைந்துகொடுக்கவில்லை. இதை யாா் கேட்பது?. தமிழக அரசு, பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டால் இதைத் தட்டிக்கேட்க முடியுமா?. இதை சரிபடுத்த வேண்டும் என்றால் தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றிபெறவேண்டும்.

தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க பாஜக முயன்று வருகிறது. இதை எதிா்ப்பதற்கு அதிமுக துணிவில்லாத கட்சியாக உள்ளது. தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com