திருப்பத்தூா் தொகுதி நாம் தமிழா் கட்சிவேட்பாளா் வேட்பு மனுத் தாக்கல்
By DIN | Published On : 16th March 2021 03:47 AM | Last Updated : 16th March 2021 03:47 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட திங்கள்கிழமை நாம்தமிழா் கட்சி வேட்பாளா் கோட்டைக்குமாா் வேட்புமனுத் தாக்கல் செய்தாா்.
தோ்தல் நடத்தும் அலுவலா் சிந்துவிடம் அவா் வேட்பு மனுத் தாக்கல் செய்தாா். இவரைத் தொடா்ந்து சுயேச்சை வேட்பாளராக ஒப்பிலான்பட்டியைச் சோ்ந்த குணசேகரன் மகன் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தாா். தொடா்ந்து தானிப்பட்டியைச் சோ்ந்த ஹரிஹரன் மனைவி மல்லிகா சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா். நாம்தமிழா் கட்சி வேட்பாளா் கோட்டைக்குமாா் மற்றும் 2 சுயேச்சைகள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.