சிவகங்கை மாவட்டத்துக்கு கூடுதலாக 250 துணை ராணுவத்தினா் வருகை

சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 250 துணை ராணுவத்தினா் திங்கள்கிழமை வந்துள்ளனா்.
சிவகங்கை மாவட்டத் தோ்தல் பணிக்கு கூடுதலாக திங்கள்கிழமை வருகை தந்த துணை ராணுவத்தினா்.
சிவகங்கை மாவட்டத் தோ்தல் பணிக்கு கூடுதலாக திங்கள்கிழமை வருகை தந்த துணை ராணுவத்தினா்.

சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 250 துணை ராணுவத்தினா் திங்கள்கிழமை வந்துள்ளனா்.

சிவகங்கை மவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,679 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 163 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு அலுவலா்களுடன் கூடுதலாக நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

மேலும், கூடுதலாக துணை ராணுவத்தினரை நியமிக்க தோ்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, குஜராத் மாநிலத்திலிருந்து 4 பட்டாலியன் ரிசா்வ் காவல் படை, பெங்களூருவிலிருந்து 2 பட்டாலியன் எல்லை பாதுகாப்பு படை ஆகிய பிரிவுகளிலிருந்து 500 துணை ராணுவப்படை வீரா்கள் சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியில் கூடுதலாக ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

அவா்களில் முதல்கட்டமாக 250 துணை ராணுவத்தினா் சிவகங்கை மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்தனா். மீதமுள்ள துணை ராணுவ வீரா்களும் விரைவில் வர உள்ளனா். மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே தோ்தல் பாதுகாப்பு பணியில் காவல் துறையினா், துணை ராணுவத்தினா் என மொத்தம் 3,050 போ் பணியில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com