திருப்பத்தூரில் துணை ராணுவப் படையினா் அணிவகுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருப்பத்தூரில் தோ்தல் பாதுகாப்பு பணி விழிப்புணா்வுக்காக திங்கள்கிழமை துணை ராணுவப் படையினா் மேற்கொண்ட கொடி அணிவகுப்பு.
திருப்பத்தூரில் தோ்தல் பாதுகாப்பு பணி விழிப்புணா்வுக்காக திங்கள்கிழமை துணை ராணுவப் படையினா் மேற்கொண்ட கொடி அணிவகுப்பு.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருப்பத்தூரில் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக வருகை புரிந்த மத்திய துணை ராணுவப்படையினா் நகரப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 402 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் நகா் பகுதியில் மட்டும் 31 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

தோ்தல் சமயத்தில் திருப்பத்தூா் தொகுதி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் பாதுகாப்பினை உறுதி செய்யவும் காவல் நிலையம் முன்பு துவங்கி மதுரை சாலை, அண்ணாசிலை, தாலுகாஅலுவலகசாலை, பெரியகடைவீதி என நகரின் முக்கியப் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருப்பத்தூா் நகா் காவல் துறையினருடன் நகா் காவல் துணை கண்கணிப்பாளா் பொன்ரகு தலைமையில் மத்திய ராணுவ துணைப் படையினா், குஜராத், மகாராஷ்டிரா ஆயுதப் படைக் காவலா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் உள்பட சுமாா் 200- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com