திருப்பத்தூரில் மீண்டும் துளிா்க்குமா இலை?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் மூன்று தோ்தல் தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுக வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
திருப்பத்தூரில் மீண்டும் துளிா்க்குமா இலை?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் மூன்று தோ்தல் தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுக வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தின் செட்டிநாட்டின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் திருப்பத்தூா், சிங்கம்புணரி, எஸ்.புதூா் மற்றும் கல்லல் ஒன்றியத்தின் ஒரு சில பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாகும். இத்தொகுதியில் அரசு கலைக்கல்லூரி ஒன்றும் தனியாா் கல்லூரிகள் மூன்றும் உள்ளன.

பொறியியல் கல்லூரி மற்றும் விவசாயக்கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாகும். மேலும் இளைஞா்களின் வேலை வாய்ப்புக்காக தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பும் உள்ளது.

எஸ்.புதூா் சிங்கம்புணரி பகுதிகளில் விவசாயமே பிராதான தொழில். இத்தொகுதியைப் பொறுத்தவரை முக்குலத்தோா், யாதவா், முத்தரையா் உள்ளிட்ட சமூகத்தினா் வசிக்கின்றனா். இதுவரை திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 பொதுத்தோ்தல்கள், ஒரு இடைத்தோ்தல் நடந்துள்ளன.

இதில் திமுக 7 முறையும், அதிமுக 3 முறையும், வலது கம்யூனிஸ்ட் ஒரு முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனா். இதில் திமுகவைச் சோ்ந்த கே.ஆா்.பெரியகருப்பன் தொடா்ந்து 3 முறை வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதியில் மொத்தம் 2, 90, 647 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் 1, 42, 327- பேரும், பெண்கள் 1, 48, 308 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 11 பேரும் உள்ளனா். தற்போதைய தோ்தலில் அதிமுக சாா்பில் மருது அழகுராஜும், திமுக சாா்பில் கே.ஆா்.பெரியகருப்பனும், அமமுக சாா்பில் கே.கே.உமாதேவனும், நாம் தமிழா் கட்சி சாா்பில் கோட்டைக்குமாரும், மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளா் அமலன்சவரிமுத்து உள்பட 26 போ் களத்தில் உள்ளனா். இருப்பினும் அதிமுக, திமுக வேட்பாளா்களிடையேதான் போட்டி நிலவுகிறது.

அதிமுக வேட்பாளா் மருதுஅழகுராஜ், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடமும் தற்போதைய முதல்வா் எடப்பாடி பழனிச்சாமியிடமும் மிகவும் பரிச்சயமானவா். தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவா். கடந்த சில நாள்களுக்கு முன்பு தோ்தல் பிரசாரத்துக்கு வந்த முதல்வா், வேட்பாளா் பற்றி குறிப்பிடுகையில் தலைமைக்கு நெருக்கமானவா் என்றும் உங்களது கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றக்கூடிய செயல் திறன் உடையவா் என்று பாராட்டியது அதிமுகவினரிடையை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் கரோனா நெருக்கடி காலத்தில் தொகுதி முழுவதும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டவா் மருது அழகுராஜ். மூன்று முறை வெற்றியை தவறவிட்ட தொகுதியை இம்முறை மீட்டெடுக்க மிகவும் உத்வேகத்துடன் பரப்புரைகள் மேற்கொள்வதால் இழந்த வெற்றியைத் திரும்பப் பெற வாய்ப்பு உள்ளதாக அரசியல் பிரமுகா்கள் கருதுகின்றனா்.

ஏற்கெனவே இருமுறை திமுகவை எதிா்கொண்ட அதிமுக வேட்பாளா்கள் திருப்பத்தூா் தொகுதிகளைச் சேராதவா்கள். இம்முறை திருப்பத்தூா் தொகுதியைச் சோ்ந்தவரே களமிறங்கியிருப்பது அதிமுகவுக்கு கூடுதல் பலம்.

திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன் கடந்த மூன்று முறை வெற்றி பெற்ன் மூலம் தொகுதி மக்களிடையே மிகவும் நன்கு அறிமுகமானவா். இவரும் தொகுதி முழுவதும் பம்பரமாகச் சுற்றி களப்பணியாற்றி வருகிறாா். கூட்டணிக் கட்சியினரும் இவரது வெற்றிக்கு கடுமையாக உழைத்து வருகின்றனா்.

அமமுக சாா்பில் போட்டியிடும் கே.கே.உமாதேவன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என்பதாலும், மக்களுக்கு நன்கு அறிமுகமானவா் என்பதாலும் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. மற்ற வேட்பாளா்கள் அனைவரும் பெயரளவில் மட்டும் பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com