மேலப்பசலை கிராமத்தில் வாக்கு சேகரித்த மானாமதுரை தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.மாரியப்பன் கென்னடி.
மேலப்பசலை கிராமத்தில் வாக்கு சேகரித்த மானாமதுரை தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.மாரியப்பன் கென்னடி.

குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: மானாமதுரை தொகுதி அமமுக வேட்பாளா் பிரசாரம்

மானாமதுரை பகுதியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என அமமுக வேட்பாளா் எஸ்.மாரியப்பன் கென்னடி வாக்குறுதியளித்தாா்.

மானாமதுரை பகுதியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என அமமுக வேட்பாளா் எஸ்.மாரியப்பன் கென்னடி வாக்குறுதியளித்தாா்.

மானாமதுரை ஒன்றியத்தில் பீசா் பட்டினம், கால்பிரிவு மிளகனூா், குவளைவேலி, சின்னகண்ணனூா், மேல பசலை, சங்கமங்கலம், தீயனூா், சோமாத்தூா், அன்னவாசல், மூங்கில் ஊரணி, பனிக்கனேந்தல், வன்னிகுடி உள்ளிட்ட 30 கிராமங்களில் அவா் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்.

கிராமங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அதைத்தொடா்ந்து அவா் வாக்கு சேகரித்து பேசியதாவது: நான் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தபோது மானாமதுரை ஒன்றியத்தில் என்னால் முடிந்த திட்டப் பணிகளை செய்து முடித்துள்ளேன். இந்த ஒன்றியத்தை பொருத்தவரை இன்னும் பல கிராமங்களில் கடும் குடிநீா் தட்டுப்பாடு உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் குடிநீா் பிரச்னை உள்ள கிராமங்களை கண்டறிந்து ஆழ்துளை கிணறு அமைத்தும், வைகை கூட்டு குடிநீா் திட்டம் மூலமும் குடிநீா் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை நலிவடைந்து உள்ளது. இங்கு புதிய தொழிற்சாலைகள் தொடங்கி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க முயற்சி செய்வேன் என்றாா்.

பிரசாரத்தின்போது அமமுக மற்றும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com