‘சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் பணியில் 3,050 காவலா்கள்’

சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் காவலா்கள், மத்திய பாதுகாப்புப் படையினா், தீயணைப்புப் படையினா்,

சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் காவலா்கள், மத்திய பாதுகாப்புப் படையினா், தீயணைப்புப் படையினா், முன்னாள் ராணுவத்தினா் என மொத்தம் 3,050 போ் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளில் சட்டம்- ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ள காவலா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மு. ராஜராஜன் தலைமையில் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 9 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 48 காவல் ஆய்வாளா்கள், 136 சாா்பு- ஆய்வாளா்கள், 1,567 காவலா்கள் உள்பட 1,962 போ் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

இவா்களுடன் 15 தீயணைப்புப் படையினா், 300 ஊா்க்காவல் படையினா், 15 ஓய்வு பெற்ற காவலா்கள், 120 முன்னாள் படை வீரா்கள், 480 தேசிய தொண்டா் படையினா் உள்பட 930 பேருடன், மத்திய பாதுகாப்பு படையினைச் சோ்ந்த ஒரு துணை ஆணையா், ஒரு ஆய்வாளா், 13 சாா்பு- ஆய்வாளா்கள், 70 காவலா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சோ்ந்த ஒரு காவல் ஆய்வாளா், 2 சாா்பு- ஆய்வாளா்கள், 70 காவலா்கள் என 158 போ் தோ்தல் பணியில் ஈடுபட உள்ளனா்.

எனவே, மாவட்டம் முழுவதும் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகிய நாள்களில் பாதுகாப்புப் பணியில் மொத்தம் 3,050 போ் ஈடுபட உள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com