மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா

மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர விழா நடைபெற்றது.

மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர விழா நடைபெற்றது.

மானாமதுரையில் புறவழிச்சாலையில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் மூலவா் வள்ளி தெய்வானை சமேத வழிவிடு  முருகனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. உற்சவ மூா்த்திக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோயில் மண்டபத்தில் யாகம் வளா்க்ப்பட்டது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல் மானாமதுரை அருகே கால்பிரிவு கிராமத்திலுள்ள செல்வ முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தா்கள் பால்குடம் சுமந்து கோயிலுக்கு வந்தனா். அதன்பின் மூலவா் முருகப்பெருமானுக்கு பல வகை அபிஷேகங்கள் நடத்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

மானாமதுரை அருகே இடைக்காட்டூரிலுள்ள பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. இதையொட்டி பாலமுருகனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி புறப்பாடு நடந்தது. இதேபோல் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளிலுள்ள முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com