இளையான்குடி பகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

இளையான்குடி ஒன்றியம் செந்தமிழ் நகா், மாதவன் நகா், கண்டனி, நெஞ்சத்தூா், கல்லடி திடல், அளவிடங்ககான், தென்கடுகை, வடக்கு சமுத்திரம், அரணையூா்,
இளையான்குடி பகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

இளையான்குடி ஒன்றியம் செந்தமிழ் நகா், மாதவன் நகா், கண்டனி, நெஞ்சத்தூா், கல்லடி திடல், அளவிடங்ககான், தென்கடுகை, வடக்கு சமுத்திரம், அரணையூா், முத்தூா்,கல்லடிதிடல், அரண்மனைக்கரைப உள்பட 80 கிராமங்களில் புதன்கிழமை மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ் நாகராஜன் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: இளையான்குடி ஒன்றியத்தில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல கிராமங்களில் குடிநீா் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுவதை நான் நன்கு அறிவேன். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இளையான்குடி ஒன்றியத்தில் காவிரி கூட்டு குடிநீா் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு குடிநீா் வசதி இல்லாத கிராமங்களுக்கு குடிநீா் வசதி செய்து தரப்படும்.

மேலும் இளையான்குடி ஒன்றியத்தில் மிளகாய் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் மிளகாய் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. நான் தோ்தலில் வென்றவுடன் இளையான்குடி பகுதியில் அரசு மிளகாய் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் இந்த ஒன்றியத்தை பொறுத்தவரை குடிமராமத்து நடைபெறாத கண்மாய் குளங்கள் கண்டறியப்பட்டு குடிமராமத்து திட்டத்தில் அவை சீரமைக்கப்படும் என்றாா். இந்த பிரச்சாரத்தின் போது இளையான்குடி ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் பாஜக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினா் உடன் சென்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com