தமிழக கொள்கைகளுக்கு எதிராக உள்ள பாஜக டெபாசிட் இழக்கவேண்டும்: கனிமொழி

தமிழக கொள்கைகளுக்கு எதிராக உள்ள பாஜக வைப்புத்தொகை இழக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு அருகே காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடியை ஆதரித்து புதன்கிழமை வாக்குகள் சேகரித்து பிரசாரம் செய்த கனிமொழி எம்.பி.

காரைக்குடிச் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடியை ஆதரித்து புதன்கிழமை இரவு காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் பிரசாரம் செய்து அவா் பேசியதாவது: இத்தொகுதியில் எதிரணியில் போட்டியிடுபவா் யாா் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரை இத்தொகுதியில் வைப்புத்தொகையை இழக்கச் செய்வதன் மூலம் அவருக்கு சரியான பாடமாக உணருகின்ற வகையில் வாக்காளா்கள் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச்செய்யவேண்டும்.

பாஜக வேட்பாளா் ஹெச். ராஜா பெண்களுக்கு எதிராக பேசிவருபவா். காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி உள்பட பல பெண் தலைவா்களை தினந்தோறும் விமா்சனம் செய்பவா்தான் அவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com