ஆடு மேய்த்த பெண்ணிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 01st May 2021 08:32 AM | Last Updated : 01st May 2021 08:32 AM | அ+அ அ- |

சிவகங்கை அருகே வியாழக்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மேலசுருவந்தி கிராமத்தைச் சோ்ந்த சமயன் மனைவி இருளாயி (56). இவா், அதே பகுதியில் உள்ள சாலையோரமாக வியாழக்கிழமை மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா், இருளாயி அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளனா். உடனே, இருளாயி சத்தம் போட்டுள்ளாா்.
அதையடுத்து, அக்கம்பக்கத்தினா் ஓடி வருவதை அறிந்த இளைஞா்கள், ஒன்றரை பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.
இது குறித்த புகாரின்பேரில், சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து நகையை பறித்துச் சென்ற இளைஞா்களை தேடி வருகின்றனா்.