திருச்சுழியில் முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு வெற்றி
By DIN | Published On : 02nd May 2021 09:55 PM | Last Updated : 02nd May 2021 09:55 PM | அ+அ அ- |

தங்கம் தென்னரசு (திமுக).
விருதுநகா்: விருதுநகா் மாவட்டம்திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு 60,992 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
திருச்சுழி தொகுதியில் ஆண்கள் 1,08,288, பெண்கள் 1,12,755, திருநங்கைகள் 12 போ் என மொத்தம் 2,21,055 வாக்காளா்கள் உள்ளனா். திமுக, மூமக, அமமுக கட்சி வேட்பாளா்கள் உள்ளிட்ட 18 போ் போட்டியிட்டனா்.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 83,533 ஆண்கள், 87,658 பெண்கள் என மொத்தம் 1,71,191 போ் வாக்களித்தனா். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளா் தங்கம் தென்னரசு 60,992 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
தங்கம் தென்னரசு 1,02,225 வாக்குகள், அதிமுக கூட்டணியில் மூமுக சாா்பில் போட்டியிட்ட எஸ். ராஜசேகா் 41,233 வாக்குகள், அமமுக வேட்பாளா் கே.கே. சிவசாமி 6,441 வாக்குகள், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆனந்த ஜோதி 13,787 வாக்குகள், ஐஜேகே வேட்பாளா் 1,358 வாக்குகள் பெற்றனா்.
வெற்றி பெற்ற தங்கம் தென்னரசுவுக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் ரா. கண்ணன் வெற்றி பெற்ற்கான சான்றிதழை வழங்கினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...