மானாமதுரையில் சித்திரைத் திருவிழா: சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வீர அழகா்
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

ஸ்ரீ வீர அழகா்.
மானாமதுரை: மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் சனிக்கிழமை ஸ்ரீ வீர அழகா் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகா் கோயிலில் சித்திரை திருவிழாவின் 9-ஆவது நாளான சனிக்கிழமை உற்சவா் ஸ்ரீ வீர அழகருக்கு அபிஷேக பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னா் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. சுவாமிக்கான பூஜைகளை அா்ச்சகா் கோபி மாதவன் நடத்தினாா். ஞாயிற்றுக்கிழமை (மே 2) உத்ஸவசாந்தியுடன் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...