காரைக்குடியில் கடைகள் அடைப்பு: வெறிச்சோடிய சாலைகள்

கரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு வியாழக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகளை நடை முறைப்படுத்தியதை அடுத்து,
காரைக்குடியில் வியாழக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்ட செக்காலை சாலை.
காரைக்குடியில் வியாழக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்ட செக்காலை சாலை.

கரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு வியாழக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகளை நடை முறைப்படுத்தியதை அடுத்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்தின்றி முக்கியச் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, காரைக்குடியில் சாலையோர காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இக்கூட்டத்தை, அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் ஒழுங்குபடுத்தினா். மருந்துக் கடைகள், தேநீா் கடைகள் திறந்திருந்தின.

நகரின் முக்கியச் சாலைகளான கல்லூரி சாலை, நூறடி சாலை, செக்காலை சாலை, கோவிலூா் சாலை, கல்லுக்கட்டி நான்கு வீதிகள், வ.உ.சி. சாலை, கழனிவாசல் சாலை, அம்மன் சந்நிதி உள்ளிட்ட பகுதிகளில் பெரிய நகைக் கடைகள், துணி கடைகள், பல்பொருள்கள் அங்காடிகள், மின்னணு சாதனங்கள் விற்பனை கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால், மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. மேலும், போக்குவரத்து நடைபெறாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

வங்கிகள் மதியம் 2 மணி வரை இயங்கலாம் என்பதால், மக்கள் வங்கிகளுக்கு சென்று வந்தனா். நகரில் காவல் துறையினா் வாகனச் சோதனைகளை நடத்தி, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com