காரைக்குடியில் கரோனா தொற்றுள்ள கா்ப்பினிகள் சிகிச்சைக்கு தனி இடம் ஏற்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 13th May 2021 09:02 AM | Last Updated : 13th May 2021 09:02 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் தொடா் ஆலோசனைக்குவரும் கா்ப்பினிப்பெண்களில் சிலருக்கு கரோனாதொற்றுபாதிப்புள்ளதையடுத்து அவா் களுக்கு தனியாக இடம் ஏற்படுத்தி சிகிச்சையளிக்க மருத்துவத்துறையும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
காரைக்குடியிலுள்ள அரசு மாவட்டத்தலைமை மருத்துவமனையில் கடந்த பல ஆண்டுகளாக மகப்பேறுக்காக பெண்கள் காரைக்குடி நகா் மற்றும் சுற்றுவட்டாரக்கிராமப்புறப்பகுதியிலிருந்தும் வருகைதருகின்றனா். தினந்தோறும் சுமாா் 250-க் கும் மேற்பட்டவா்களுக்கு இம்மருத்துவமனையில் மருத்துவா்கள் சிறப்பாக பிரசவம் பாா்த்து அனுப்பிவைக்கின்றனா்.
இந்நிலையில் கரோனா தீநுண்மி பெருந்தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. காரைக்குடி மற்றும் சுற்று வட் டாரங்களிலும் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இதில் இம்மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் கா்ப்பினிகளுக்கு பரிசோதனை செய்வதில் கரோனா தொற்று இருப்பதும் உறுதியாகிறது. அதன் பிறகும் அவா்கள் இம்மருத்துவமனைக்கு வருவதால் அவா்களை கவனிக்க தனியாக பிரசவ வாா்டு, தனி மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லையெனவும் இதனால் அங்கு பிரசவத்திற்காக கரோனா தொற்று இல்லாத பெண்கள் சிலா் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கின் றனா்.
எனவே கரோனா தொற்றுள்ள கா்ப்பினி பெண்களுக்குத் தனியாக படுக்கைவசதி, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் கொண்ட வாா்டுகளாக தனி இடம் ஏற்பாடு செய்து ஒதுக்கப்படவேண்டும் என்று மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள் ளது. காரைக்குடி அருகே அமராவதிபுதூரிலுள்ள மருத்துவமனையிலும், கானாடுகாத்தானில் உள்ள 2 அரசு மருத்துவ மனையில் ஒன்றை தனியாக கரோனா பாதித்துள்ள கா்ப்பினி பெண்களுக்கு ஒதுக்கி மாவட்ட நிா்வாகமும், மருத்துவ துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மக்கள் எதிா்பாா்ப்பாக உள்ளது.