காரைக்குடியில் ஊடரங்கு கால அவசர நிலை ரத்த தான முகாம்

சிவகங்கைமாவட்டம் காரைக்குடியில் ஊரடங்கு கால அவசரநிலை ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கைமாவட்டம் காரைக்குடியில் ஊரடங்கு கால அவசரநிலை ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் காவல்துறையின் அனுமதிபெற்று இம்முகாம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மு. ராஜராஜன் ஆலோசனையின்படி காரைக்குடி டி.எஸ்.பி அருண், காரைக்குடி வட்டாச்சி யா் அந்தேணிராஜ் மற்றும் சமூக ஆா்வலா்கள், மாவட்ட அரசு தலைமைமருத்துவமனை ஆகியன இணைந்து முகாமை ஏற்பாடு செய்திருந்தனா். காரைக்குடி அரசு மருத்துவமனை ரத்தவங்கி அலுவலா் வி. அருள்தாஸ் தலைமையிலான குழு வினா் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களிலிருந்தும் 107 போ் ரத்த தானம் செய்தனா். காரைக்குடி டி.எஸ்.பி அருண் ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கி கூறுகையில், இந்த கரோனா தொற்று காலத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இங்கு ரத்த தானம் செய்த அனைவருக்கும், முகாமை ஏற்பாடு செய்த அனைத்து சமூக ஆா்வலா்களுக்கும் பாராட்டுக்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com