சிவகங்கை மாவட்டத்தில் தங்கப் பத்திரம் விற்பனை
By DIN | Published On : 18th May 2021 01:08 AM | Last Updated : 18th May 2021 01:08 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை (மே 17) முதல் தங்கப் பத்திர விற்பனை நடைபெற்று வருவதாக சிவகங்கை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் டி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை அஞ்சலகக் கோட்டத்தில் உள்ள அனைத்துத் தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை மே 17 முதல் 21 வரை (5 நாள்கள் மட்டும்) நடைபெற உள்ளது.
ஒரு தனிநபா் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கலாம். ஒரு கிராமுக்கு ரூ.4,777 விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீதம் ஆண்டு வட்டி 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும். மேலும், 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிா்வுத் தொகை வழங்கப்படும்.
மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களையோ அல்லது 97896 09988 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.