‘பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகே பொருள்களை வாங்க வேண்டும்’

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள கடைகளில் பொருள்களை வாங்க வேண்டும் என சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மு. ராஜராஜன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள கடைகளில் பொருள்களை வாங்க வேண்டும் என சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மு. ராஜராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி காய்கனி, மளிகை உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி தேவையின்றி காா் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வெளியே சென்று வருகின்றனா். மாவட்டம் முழுவதும் அவ்வாறு உரிய காரணமின்றி சுற்றிய 439 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 419 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொதுமுடக்க விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றி கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள கடைகளில் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com