பசும்பொன் சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு மானாமதுரையில் அதிமுகவினர் வரவேற்பு

பசும்பொன் செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பளித்தனர். 
பசும்பொன் செல்லும் வழியில் மானா மதுரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வத்திற்கு அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பளித்தனர்.
பசும்பொன் செல்லும் வழியில் மானா மதுரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வத்திற்கு அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

பசும்பொன் செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பளித்தனர். 
ஒவ்வொரு ஆண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தேவர் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன் கிராமத்திற்கு சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் பசும்பொன் கிராமத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் செல்லவில்லை. இதையடுத்து திங்கள்கிழமை அவர் பசும்பொனூல்  தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக புறப்பட்டுச் சென்றார். வழியில் மானாமதுரை பேருந்து நிலையம் முன்பு சிவகங்கை மாவட்ட அதிமுக மற்றும் மானாமதுரை தொகுதி அதிமுக சார்பில் அக்கட்சியினர் திரண்டு சிறப்பான வரவேற்புக் கொடுத்தனர்.

அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பன்னீர்செல்வத்திற்கு சால்வைக்ள், பூங்கொத்துக்கள் கொடுத்து வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பன்னீர்செல்வம் பசும்பொன் புறப்பட்டுச் சென்று தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், மானாமதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.நாகராஜன் எம். குணசேகரன், அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயபிரகாஷ், சிவசிவ ஸ்ரீதரன், நகரச் செயலாளர் விஜி.போஸ் கூட்டுறவு அமைப்புகளின் தலைவர்கள் சின்னை. மாரியப்பன், தெய்வேந்திரன் மாவட்டக் கவுன்சிலர் ஏ.சி.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com