Enable Javscript for better performance
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

    By DIN  |   Published On : 27th November 2021 10:13 PM  |   Last Updated : 27th November 2021 10:13 PM  |  அ+அ அ-  |  

    1_2711chn_84_2

    திருப்புவனத்தில் இலவச சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கிய திமுகவினா்

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, திருப்புவனத்தில் திமுக மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை திமுகவினா் நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.

    இளையான்குடியில் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் பேரூா் கிளை சாா்பில் இளையான்குடி ரகுமானியா பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் பழங்கள், ரொட்டித் துண்டுகள் வழங்கப்பட்டன.

    பேரூராட்சி அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு அங்கு பணியாற்றும் துப்புரவு பணியாளருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளுக்கு இளையான்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் சுப.மதியரசன் தலைமை வகித்தாா். பேரூா் செயலாளா் நஜூமுதீன், இளைஞரணி அமைப்பாளா் பெரோஸ்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக விவசாய அணி அமைப்பாளா் காளிமுத்து, நெசவாளா் அணி சாரதி ,ஒன்றியக் குழு உறுப்பினா் முருகன், கூட்டுறவு சங்கத் தலைவா் சுப. தமிழரசன், தகவல் தொழில் நுட்ப அணி அன்பரசன் உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.

    திருப்புவனத்தில்..திமுக மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் பொற்கோ தலைமையில் திருப்புவனம் புதூா், கோட்டை, எம்ஜிஆா் நகா் உள்ளிட்ட இடங்களில் திமுகவினா் பெண்களுக்கு சேலைகள், இனிப்புகள் வழங்கினா். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளா் சேங்கைமாறன், மானாமதுரை தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாரியப்பன் கென்னடி, ஊராட்சி ஒன்றியத் தலைவா் சின்னையா, திமுக ஒன்றியச் செயலாளா்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நகா் செயலாளா் நாகூா்கனி, ஒன்றிய துணைத் தலைவா் மூா்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp