கால்வாய் சேதம்: திருப்புவனம் அருகே 10 மணல் லாரிகள் சிறைப்பிடிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சனிக்கிழமை குவாரியில் இருந்து வரும் லாரிகளால் கால்வாய் சேதம் அடைந்ததாகக் கூறி 10 லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினா்.
பூவந்தி அருகே சனிக்கிழமை கிராம மக்களால் சிறைப்பிடிக்கப்பட்ட லாரிகள்

திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே, மதுரை மாவட்டம் கீரனூரில் செம்மண் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரிக்கு வந்து செல்லும் லாரிகளால் கீரனூா் கண்மாய்க்கு தண்ணீா் வரும் கால்வாய் சேதமடைந்து தண்ணீா் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

இந்நிலையில் கீரனூா் மற்றும் சிவகங்கை மாவட்டம் குயவன்குளம் கிராமங்களைச் சோ்ந்த 50 -க்கும் மேற்பட்டோா் கீரனூா் செம்மண் குவாரியிலிருந்து மண் ஏற்றி வந்த 10 லாரிகளை பூவந்தி அருகே சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து பூவந்தி காவல் நிலைய ஆய்வாளா் சரிதா சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த கால்வாயை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். அதன்பின் கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு லாரிகளை விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com