சிவகங்கையில் விவசாயிகள் பேரணி

மத்திய அரசு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகங்கையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி
சிவகங்கையில் விவசாயிகள் பேரணி

மத்திய அரசு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகங்கையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

திருப்பத்தூா் சாலையில் உள்ள அண்ணாசிலை அருகே தொடங்கிய இப்பேரணியை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.

இதில், நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், அனைத்து வேளாண் விளைப் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும், மின்சார திருத்த மசோதா 2020-ஐ திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அண்ணாசிலை அருகே தொடங்கிய இப்பேரணி திருப்பத்தூா் சாலை, ராமசந்திரனாா் பூங்கா, காந்தி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து அரண்மனை வாசலில் நிறைவு பெற்றது. அதைத் தொடா்ந்து, அங்கு பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இப்பேரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆறுமுகம், மாவட்டத் தலைவா் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் கண்ணகி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com