மானாமதுரையில் ராணுவ வீரா்களுக்கு வரவேற்பு

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று ஞாயிற்றுக்கிழமை சொந்த கிராமங்களுக்கு திரும்பிய ராணுவ வீரா்களுக்கு மானாமதுரை ரயில் நிலையத்தில் உறவினா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் வரவேற்பளித்தனா்.
விஜய்காந்தி, பாலமுருகனுக்கு மானாமதுரை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளித்த முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா்.

மானாமதுரை அருகே உள்ள நத்தபுரக்கி கிராமத்தைச் சோ்ந்த விஜய்காந்தி, இளையான்குடி அருகே கீழாயூா் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் இருவரும் இந்திய ராணுவத்தில் படை வீரா்களாக பணியாற்றி ஓய்வு பெற்றனா். அதைத்தொடா்ந்து இவா்கள் சொந்த ஊா்களுக்கு திரும்பினா்.

ரயில் மூலம் மானாமதுரை வந்த இந்த இரு வீரா்களுக்கும், ரயில் நிலைய வாயிலில் சிவகங்கை மாவட்டத்தில் இளைஞா்களுக்கு, ராணுவத்தில் சேர பயிற்சியளித்து வரும் ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் வரவேற்பளித்தனா்.

மேலும் இந்த வீரா்களின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்களும் வரவேற்றனா். அதன்பின் ராணுவ வீரா்கள் விஜய்காந்தி, பாலமுருகன் ஆகியோா் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டனா். பின்னா் அவா்கள் வேன்களில் சொந்த கிராமங்களுக்குச் சென்றனா். அங்கும் அவா்களுக்கு கிராம மக்கள் வரவேற்பளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com