திருப்பாச்சேத்தியில் துப்பாக்கி கவுண்டர் நினைவுநாள் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் திருப்பாச்சேத்தியில் செவ்வாய்க்கிழமை மாவீரன் துப்பாக்கி கவுண்டர் என்ற உதயபெருமாள் கவுண்டரின்  220 ஆவது நினைவு நாள் விழா கொண்டாடப்பட்டது. 
திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் மதுரை ஆதினம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் மதுரை ஆதினம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் திருப்பாச்சேத்தியில் செவ்வாய்க்கிழமை மாவீரன் துப்பாக்கி கவுண்டர் என்ற உதயபெருமாள் கவுண்டரின்  220 ஆவது நினைவு நாள் விழா கொண்டாடப்பட்டது. 

திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் அனைத்து வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு துப்பாக்கி கவுண்டர் உதயபெருமாள் வாழ்க்கை வரலாற்றை விளக்கிப் பேசினார். 

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் மாவீரன் துப்பாக்கி கவுண்டர் என்ற உதயப்பெருமாள் கவுண்டர்  உருவப்படத்திற்கு மதுரை ஆதினம் மாலை அணிவித்து அவரது வாழ்க்கை வரலாறு குறித்து குறித்து விளக்கிப் பேசினார்.

முன்னதாக அவர் துப்பாக்கி கவுண்டரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து திருப்பாச்சேத்தி சிவன் கோயில் வளாகத்தில் மதுரை ஆதினம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் விழாவில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். 

திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் மதுரை ஆதீனம் விழாவில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் மதுரை ஆதீனம் விழாவில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

இவ்விழாவில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி திருப்புவனம் செல்வராஜ் பிள்ளை, பிள்ளைமார் சமுதாயத்தின் தலைவர்கள் அன்னலட்சுமி, ஆறுமுகம்பிள்ளை உள்பட  சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com