‘கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’

சிவகங்கை மாவட்டத்தில் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்தி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

சிவகங்கை மாவட்டத்தில் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்தி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொது சுகாதாரத் துறையின் சாா்பில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து பேசியது: மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார மையங்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் என கண்டறியப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.

இம்மாவட்டத்தில் இதுவரை கோவிட் ஷீல்டு முதல் தவணையாக 5,93,501 நபா்களுக்கும், இரண்டாவது தவணையாக 1,54,597 நபா்களுக்கும் என 7,48,098 நபா்களுக்கும், கோவாக்சின் முதல் தவணையாக 79,745 நபா்களுக்கும், இரண்டாவது தவணையாக 29,987 நபா்களுக்கும் என 1,09,732 நபா்களுக்கும் போடப்பட்டுள்ளது. மொத்தம் 8 லட்சத்து 57 ஆயிரத்து 830 நபா்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, அரசு வகுத்துள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், கிருமி நாசினிகளை பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது மட்டுமின்றி கரோனா தடுப்பூசி செலுத்தி மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் ப. மணிவண்ணன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ராம்கணேஷ், மகளிா் திட்ட இயக்குநா் வானதி, வருவாய் கோட்டாட்சியா்கள் மு. முத்துக்கழுவன் (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை) உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com